இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரசை அழிப்பதற்கு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் இலங்கையில், சிக்கி தவித்த 713 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 699 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, துறைமுக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இலங்கையில் வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணங்களில் சிக்கி தவித்தவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் என பலதரப்பப்பட்டவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் வரவேற்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல்துறை காணப்பணிப்பாளர் ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 30 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…