70 வயதுவரை நடித்து முடித்தவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது வி.சி.க. ஏன் வரக்கூடாது.? – திருமாவளவன்
- நேற்று திருச்சியில் வி.சி.க சார்பாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
- அப்போது பேசிய திருமாவளவன் 70 வயதுவரை நடித்து முடித்த அவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது 30 ஆண்டுகளாக மக்களுக்கு தொண்டாற்றும் வி.சி.க ஏன் ஆட்சி வரக்கூடாது..? என கேள்வி எழுப்பினார்.
நேற்று திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பட்டியலினத்தவர் நீதிபதியாவது யார் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பின் சட்டம் தந்த உரிமை எனக் கூறினார்.அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை விடுதலை சிறுத்தை கட்சி தீர்மானிக்கும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறும் கோஷம் போடும் கட்சியாக இனி எந்த கட்சியும் நினைக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கட்சியாக மாறி வருகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் 70 வயதுவரை நடித்து முடித்த அவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது 30 ஆண்டுகளாக மக்களுக்கு தொண்டாற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஏன் ஆட்சி வரக்கூடாது..? என கேள்வி எழுப்பினார். மேலும் டெல்லியில் அடுத்த மாதம் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்த உள்ளார். அந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சி கலந்து கொள்ளும் என திருமாவளவன் கூறினார்.