கொரோனா சிகிச்சைக்கு 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க முடிவு- சுகாதாரத்துறை!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
அதில் முதற்கட்டமாக, 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025