திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே மன்னர் (39). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காணவில்லை என அவரது மனைவி மேரி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருநெல்வேலி குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வு துறைக்கு வழக்கு விசாரிக்க அனுப்பப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மன்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ப்பதற்காக சென்று உள்ளார்.அப்போது பன்னீர்செல்வம் என்பவர் தனது தோட்டத்தில் விலங்குகள் வராமல் இருக்க மின்வேலி அமைத்து உள்ளார். அதில் சிக்கி மன்னர் உயிர் இறந்து உள்ளார்.
இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் ,அவரது மனைவி பாப்பா மருமகன் பாலகுரு ஆகியோர் தங்களது தோட்டத்தில் மன்னர் உடலை புதைத்து உள்ளனர்.பின்னர் ஊரில் நல்லவர்கள் போல நாடகம் ஆடியது தெரியவந்து.
இந்நிலையில் கடந்த ஆண்டுதான் பன்னீர்செல்வம் உடல் நிலை சரியில்லாமல் இறந்து உள்ளார்.இதனால் போலீசார் பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…