திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமி பிணமாக மீட்பு!

Default Image

திருச்செந்தூர், கல்வலையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இருவரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கள்வனையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி, பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உட்பட இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக தகவல் வெளியானது. மேலும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்