புரேவி புயலுக்கு பலியான 7 பேர் .! முதல்வர் பழனிச்சாமி இரங்கல்.!

Default Image

புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேலும் பரவலாக பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது.மேலும் புயல் மழையால் பலர் உயிரிழந்தும் உள்ளனர் .
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 7 பேர் புரேவி புயல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், புரேவி புயலால் ஏற்பட்ட கனமழையால் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ,44,716 ஏக்கல் நெல் ,வாழைகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயல்,மழை காரணமாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் .அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,புரேவி புயல்,கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.மேலும் 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்