பள்ளிக்கல்வித்துறையில் 7 பேருக்கு பதவி உயர்த்தி, உடனடியாக பணியில் சேர உத்தரவு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர், கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் மதன்குமார், ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கல்வி அலுவலர் பாலதண்டபாணி, தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராகவும், திருச்சி மாவட்ட லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன், சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குநர் அலுவலக துணை இயக்குநராகவும் பதவி உயர்வு அளித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து 2 பேருக்கு நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் செந்திவேல் முருகன், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்டத்தில் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)