பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, இன்னும் சில மாவட்டங்களின் சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு வரை சிறை தண்டனை.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆனால் ஆயுள் காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம் எனவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் மசோதா எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனையடுத்து, சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் ” பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். அதைப்போல, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில், தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும். அதைப்போல, வரும் ஆண்டில் 3,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும்” மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து விடியல் எங்கே? என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். சொன்னது மக்களுக்கு தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல…விடியலைப் பார்த்தால் அவர்களது கண்கள் கூசத்தான் செய்யும் எனவும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025