பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில், நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 போரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநரின் காலதாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீதிமன்றத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனினும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது வரலாற்றில் மறுக்கப்பட்ட நீதியாகவே பதிவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 போரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…