ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் 7பேர் விடுதலை செய்யப்படுவார்கள்…!சரத்குமார்
ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் 7பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் சென்று கொண்டிருக்கிறோம். ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் 7பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது எனது கருத்து. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.