7 பேர் விடுதலை ! முதல்வருடன் வரத் திமுக எம்பிக்கள் தயார் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் கூறி – 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் ஏழு பேர் விடுதலைக்கு @CMOTamilNadu நடவடிக்கை எடுக்க வேண்டும்;
ஏழு பேர் விடுதலைக்காக குடியரசு தலைவரை சந்திக்க முதலமைச்சர் சென்றால் – திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் வரத் தயார்”
– கழக தலைவர் @mkstalin அறிக்கை.
Link: https://t.co/9AfV8y2krY pic.twitter.com/YZynYzZqbB
— DMK (@arivalayam) February 5, 2021