திண்டுக்கல்: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 7 பேர் பலி!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்சிக்கி 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்த சோகம் ஏற்ப்பட்டுள்ளது.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital) நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உட்பட7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீ விபத்தின்போது மருத்துவமனையில் சிக்கி கொண்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மருத்துவமனையின் லிப்டில் சிலர் சிக்கி கொண்டனர். 4 மாடி கொண்ட மருத்துவமனையில் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில், உடனடியாக தீயணைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மருத்துவமனை வளாகம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால், மீட்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. பின்னர், துரிதமாக செயல்பட்டு லிப்டுக்குள் மயங்கி கிடந்த 7 பேரை மீட்டுள்ளனர், இதுவரை 32 பேரை அக்குழு மீட்டுள்ளது.
பின்னர், மருத்துவமனையில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என ஆய்வு நடக்கிறது. மருத்துவமனையில் இருந்த கணினியில் ஏற்பட்ட தீ பிற பகுதிகளுக்கும் பரவியதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025