100 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.!

Default Image

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள பாபுஜி மகாராஜ் கோயில் கொட்டகை மீது, 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு பணிக்கான நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டன. அதே நேரத்தில், மரத்தை அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரவழைக்கப்பட்டன.

காயமடைந்தவர்களில் சிலர் அம்மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு மற்றும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்