Accident [File Image]
திருவண்ணாமலை அருகே செங்கம் பக்கிரிப்பாளையம் புறவழிசாலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன.
திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோவில் 11 பேர் பெங்களூர் நோக்கி சென்றுள்ளனர். அதே போல, பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளளது. அப்போது தான் செங்கம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதியில் காரும் , அரசு பேருந்தும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செங்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் , விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காரில் 11 பேர் பயணித்தனர் என்றும், அதில் உடல் நசுங்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும், 4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்தில் பயணித்த 10 பேர் காயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சுமோவில் வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதே செங்கம் புறவழிசாலையில் கடந்த 15ஆம் தேதி கார் – லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…