அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! 7 பேர் உடல் நசுங்கி பலி.!

Accident

திருவண்ணாமலை அருகே செங்கம் பக்கிரிப்பாளையம் புறவழிசாலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன.

திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோவில் 11 பேர் பெங்களூர் நோக்கி சென்றுள்ளனர். அதே போல, பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளளது. அப்போது தான் செங்கம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதியில் காரும் , அரசு பேருந்தும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த பயங்கர விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செங்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் , விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காரில் 11 பேர் பயணித்தனர் என்றும், அதில் உடல் நசுங்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும்,  4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்தில் பயணித்த 10 பேர் காயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சுமோவில் வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதே செங்கம் புறவழிசாலையில் கடந்த 15ஆம் தேதி கார் – லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்