இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் தனுஷ்கோடி வருகை.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், அந்த நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 29 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை பகுதியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 2 சிறுவர்கள், 1 சிறுமி உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர். இவ்ரகள் அனைவரும் இந்திய கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர். பின் மண்டபம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். விசாரணை முடிந்த பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அனைவரும் தங்கவைக்கப்பட உள்ளனர்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…