7 பேர் விடுதலை விவகாரம் : அரசு தன் கடமையை செய்ய வேண்டும்-காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சியே வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனிடையே நேற்று தமிழக சட்டப்பேரவை கூடடம் கூடியது.அப்பொழுது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சியே வந்துவிட்டது.அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.