7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை!
தமிழக அரசானது சட்டசபையில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலைகாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாததால் அவர்கள் விடுதலை ஆகவில்லை. இது தொடர்பாக தண்டனை பெற்று வரும் நளினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் போது, தமிழக அரசு சார்பில், ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை இந்த விடுதலை குறித்து ஆளுநர் ஆலோசித்து வருகின்றார். ‘ என வாதிடப்பட்டது. இதனை அடுத்து அந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.