7 பேர் விடுதலை :தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்-சீமான்
7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனைக்கழிவு வழங்கி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்த போதும், மாநில அரசே தண்டனைக்கழிவு வழங்கி விடுதலை கொடுத்த நடைமுறையை அடியொற்றி தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.