தமிழகத்தில் புயல் மழையால் 7 பேர் உயிரிழப்பு.!
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புரேவி புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது .இந்த புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .பரவலாக பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது.மேலும் புயல் மழையால் பலர் உயிரிழந்தும் உள்ளனர் .
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 7 பேர் புரேவி புயல் காரணமாக உயிரிழந்துள்ளனர் .மேலும் இந்த புரேவி புயலால் ஏற்பட்ட கனமழையால் 1,064 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ,44,716 ஏக்கல் நெல் ,வாழைகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.