7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு….!
7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து,ஐபிஎஸ் ,ஐஏஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,
- தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாக – தேஷ்முக் ஷேகர் சஞ்சய் நியமனம்.( இதற்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)
- ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக- தீபா சத்யன் நியமனம் (இதற்கு முன்னர் ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)
- ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக – இளங்கோ நியமனம்(இதற்கு முன்னர் தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாகப் பதவி வகித்து வந்தார்)
- செயலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக – ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் கடலோரப் பாதுகாப்புக் குழு (ராமநாதபுரம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)
- நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக -மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் செயலாக்கப்பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்)
- ரயில்வே (சென்னை) ஐஜியாக கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.(இதற்கு முன்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு – 2 (நிதி நிறுவனங்கள்) (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வந்தார்)
- கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.