சமயலறையில் 7 அடி நாக பாம்பு – வனத்துறையினரிடம் சிக்கிய பாம்பு!

கோவை மாவட்டத்தில் வீட்டின் சமயலறையில் பதுங்கியிருந்த 7 அடி பாம்பை வனப்பகுதியின் பிடித்து சென்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள ஆலங்கோப்பு எனும் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கர். அவரது வீட்டின் சமயலறையில் 7 அடி நீளமுள்ள நாக பாம்பு மளிகை பொருள்கள் வைக்குமிடத்தில் பதுங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை மீது கொண்டு சென்றுள்ளனர்.