#Breaking : மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து.!
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது கரையை கடந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக பலத்த காற்றும் வீசி வருகிறது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், கொழும்பு, கடப்பா, தூத்துக்குடி, மும்பை ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களும், கொழும்பு, கடப்பா, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது போக வானிலை இன்னும் அதே நிலை நீடித்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.