அதிமுகவில் இருந்து 7 பேர் நீக்கம் – ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி..!
தேனீ மாவட்டத்தில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினாலும், கட்சியில் இருந்து 7 பேரை நீக்கம் செய்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
- திரு. R. ஜெகதீசன், (சின்னமனூர் நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர்,நகர மன்ற வார்டு உறுப்பினர் )
- திருமதி S. உமாராணி, (சின்னமனூர் நகர மன்ற 13-ஆவது வார்டு உறுப்பினர்)
- திருமதி T. கவிதா ராணி, (சின்னமனூர் நகர மன்ற 14-ஆவது வார்டு உறுப்பினர்)
- திரு. V. பிச்சை கணபதி, (சின்னமனூர் நகர மன்ற 18-ஆவது வார்டு உறுப்பினர் )
- திருமதி M. செல்வி, (சின்னமனூர் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி, நகர மன்ற 22-ஆவது வார்டு உறுப்பினர் )
- திரு. T.தவசி., (சின்னமனூர் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர், நகர மன்ற 26-ஆவது வார்டு உறுப்பினர்)
- திரு. P.ராஜேந்திரன், (திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டவர்) (சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) ஆகியோர்,
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/Dg3FgHK8tW
— AIADMK (@AIADMKOfficial) March 4, 2022