தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.!
தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேக மறுபாட்டின் காரணமாக மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மேலும் தெற்கு கடலோர மற்றும் உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
மேலும் சென்னை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.