வேலூரில் 7 பேர் மரணம் ஏன்..? அறிக்கை தர உத்தரவு..!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கைதர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அதில் கொரோனா வார்டில் 4 பேரும், பொது வார்டில் மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர்.
7 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என புகார் எழுந்தது. ஆனால், இந்த உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், கொரனோ வார்டில் சிகிச்சை பெற்ற 4 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.