இந்தெந்த மாநிலத்தில் இருந்து வருவோர் 7 நாள் தனிமை கட்டாயம் – தமிழக அரசு
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் தங்களை கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர். வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும்முன் கொரோனா சோதனையை 3 நாட்களுக்குள் எடுத்திருக்க வேண்டும். சோதனை முடிவை https://www.newdelhiairport.in/ என்ற தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, கேரளா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடாடுகிறது.