நாளை மறுநாள் வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள் நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பட்டிருந்தது.
Leo Morning Show: உள்துறை செயலருடன் லியோ படக்குழு சந்திப்பு!
இதனை தொடர்ந்து, லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளிப்பதற்காக, லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து மனு வழங்கியுள்னர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு விஜய் ரசிகர்கள் சார்பில் 19ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதன்படி, லியோ திரைப்படத்துக்கு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள10 மேற்பட்ட திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…