#BREAKING : 9 மணி வரை 7.72 % வாக்குகள் பதிவாகியுள்ளது – தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ..!
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவகியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவகியுள்ளது. 9 மாவட்டங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் காவலர்கள், ஊர்காவலர் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது ரூ.97.98 லட்சம் ரொக்கம், ரூ.34.53 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 1551 புடவைகள் , குங்கும சிமிழ் 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன என தெரிவித்தார்.