12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இதில் நான்கு 4.13 லட்சம் மாணவியர்கள் 3.52 லட்சம் மாணவர்கள் ஒரு திருநங்கை ஆகியோர் தேர்வு எழுத உள்ளனர்.
மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,875 தனி தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
முதல் நாளில் இன்று தமிழ் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை அடுத்து வரும் ஐந்தாம் தேதி ஆங்கில மொழிதேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு தேர்விற்கும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரையில் விடுமுறை விடப்படுகிறது. வரும் மார்ச் 22ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவடைய உள்ளது.
மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதவும், மாணவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துவதாகவும, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சமூக வலைதளத்தில் அறிவுரை வழங்கி இருந்தார்.
உரிய தேர்வு விதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தேர்தல் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 3,200 பறக்கும் படைகளும் 43,200 பேர் வரையில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…