7.5% இட ஒதுக்கீடு – அரசு பதில் தர உத்தரவு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்தக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில பாரதிய சத்ரிய மகாசபாவின் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். நடப்பு கல்வியாண்டில் 2,656 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் 500 பேருக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீட்டில் பயன் உள்ளது என வெங்கடேசன் தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.