7.5% இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு ,பின்பு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் ,அதற்கு ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், 7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தமிழக அரசும் ,ஆளுநர் தரப்பும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 % இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசணை வெளியிடப்பட்டது.மேலும் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு நீதிமன்றம் ,7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்து வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…