7.5 % இட ஒதுக்கீடு விவகாரம் – உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம்
7.5 % இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.இதன் பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.
இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்தார். அதில், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை. நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராததால் உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு வழிகாட்டச் சொல்லி அமித் ஷா அவர்களுக்கு திமுக எம்.பி-க்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அழுத்தம் தர அஞ்சி நடுங்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? பதவிக்காக மாணவர் நலனை காவு கொடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% #Reservation மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு வழிகாட்டச் சொல்லி @AmitShah அவர்களுக்கு திமுக எம்.பி-க்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அழுத்தம் தர அஞ்சி நடுங்கும் @CMOTamilNadu என்ன செய்யப் போகிறார்? பதவிக்காக மாணவர் நலனை காவு கொடுக்கிறாரா? pic.twitter.com/7KpZE1lj7j
— M.K.Stalin (@mkstalin) October 27, 2020