தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!
தொழிற்கல்விப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5% முன்னுரிமை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என விரிவான விளக்கங்களுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் 6ம் முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு நிறைவேறிய நிலையில், தற்போது அதற்கான விரிவான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொழிற்கல்விப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5% முன்னுரிமை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.#TNAssembly #TNGovt #CMMKStalin pic.twitter.com/Jd32M4mzXI
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 3, 2021