மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.!
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை தொடங்கப்பட்டதை அடுத்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இதில், தமிழக அரசு பள்ளியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகள் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.