7.5% இட ஒதுக்கீடு – இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தந்ததை எதிர்த்து மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவரது வழக்கில் , 565 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் 7.5% இடஒதுக்கீட்டால் தனது வாய்ப்பு பறிபோவதாக குற்றம்சாட்டினார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.