7.5% இடஒதுக்கீடு: கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார் முதல்வர்.
மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு 11,000 பேர் பயன்பெறுவார்கள். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும். கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது தெரிவித்தார். இதனிடையே, மாணவ, மாணவிகளுக்கு பி.இ சேர்க்கை ஆணைகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025