7.5% இட ஒதுக்கீடு! கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? – பாமக கண்டனம்
பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரை கூறுகையில், 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா?, கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் கேட்டு நெருக்கடி தருவதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதை தனியார் கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதே கடினம் எனும் நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எந்த வகையிலும் பணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.