தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப்பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தனியார் பயிற்சியின்றி, நீட் தேர்வில் வெற்றிபெற்று உதவும் பொருட்டு, சட்டப்பேரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது. நிறைவேற்றி 40 நாட்கள் கடந்தபின்னும் ஆளுநர் அனுமதியளிக்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …