மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு.. நன்றி தெரிவித்த சூர்யா..!
நீட் தேர்வுக்கு முந்தைய நாள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை பலர் வரவேற்றனர். அதே நேரத்தில் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். சட்டசபையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதலமைச்சர் நிறைவேற்றினார்.
இந்நிலையில், சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்… என பதிவிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…
— Suriya Sivakumar (@Suriya_offl) September 16, 2020