தமிழகத்துக்கு 7.33 கொரோனா தடுப்பூசிகள் வருகிறது – மத்திய அரசு ஒதுக்கீடு!!
தமிழகத்துக்கு 7.33 கொரோனா தடுப்பூசிகளை இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு 7.33 கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 5.39 லட்சம் கோவிஷீல்டு, 1.94 லட்சமா கோவாக்சின் தடுப்பூசிகள் இன்னும் 2 வாரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு திட்டமிட்டபடி, இன்று கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்காத நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இதனால், 18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம் என்றும் பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு கேட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை மத்திய அரசு எப்போது தரும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.