7-வது நாளாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!
நெல்லை மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம். மாவட்டத்தில் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள 1,150 அரசுப் பேருந்துகளில் 590 பேருந்துகள் இயக்கம். மாநகர் பகுதியில் 56 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். புறநகர் பகுதிகளில் 53 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன
மதுரை மாவட்டத்தில் 70 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். 16 பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம். 920 பேருந்துகளில் 450 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 67 சதவீத பேருந்துகள் இயக்கம். மொத்தமுள்ள 865 பேருந்துகளில் 675 பேருந்துகள் மட்டும் இயக்கம். பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை.
கரூரில் 65 சதவீத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் 5 பணிமனைகளில் உள்ள மொத்தம் 270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு 100 சதவீதப் பேருந்துகளும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அண்டை மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறைவாக உள்ளதால் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
source: dinasuvadu.com