7 பேர் விடுதலையில் சிக்கல்..? ஆளுநர் மாளிகை கருத்து..!!

Default Image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரிந்துரை செய்தது.

Image result for 7 பேர் விடுதலை

தமிழக அரசின் பரிந்துரை குறித்து உள்துறையின் கருத்தினை ஆளுநர் மாளிகை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் சிக்கலான ஒன்று ; இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது ஆளுநர் மாளிகை.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்