” 7 பேரையும் விடுவிக்கலாம் ” தமிழக அமைச்சரவை முடிவு..!!

Published by
Dinasuvadu desk

`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை!’

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருஇகன்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில்,   அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது எனவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மறைந்த முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஏற்கெனவே பரிந்துரை செய்த நிலையில், அதை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், `ஆளுநர் அமைச்சரவையின் ஒப்புதலை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Recent Posts

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

10 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

38 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

1 hour ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago