ஃப்ரீ பயர் விளையாட செல்போன் கொடுக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரை சேர்ந்த தம்பதிகள் பழனி கிட்டனம்மாள். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. மூன்று பெண்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஈஸ்வரன் எட்டாம் வகுப்பும், அர்ஜுனன் ஆறாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
இருவரும் அடிக்கடி செல்போனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடுவது தொடர்பாக சண்டையிட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃப்ரீ பயர் கேம் விளையாடுவது தொடர்பாக இருவரும் சண்டையிட்டதில், அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்று குத்த முயன்றுள்ளார். அவரது அம்மா அர்ஜுனனை தடுத்து பிடிங்கி எறிந்துள்ளார்.
இந்த நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய அர்ஜுனன் ஃப்ரீ பயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் அவரது அக்கா சமாதனம் செய்த நிலையில், கோபமடைந்த அர்ஜுனன் வீட்டின் ஜன்னலில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அர்ஜுனனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…