சென்னையில் முறையான மழை நீர் சேகரிப்பு இல்லாத 69,490 பேருக்கு நோட்டீஸ் 1 வாரம் கெடு !

சென்னையில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் வணிகவளாகங்கள் ,உணவகங்கள் தண்ணீரின்றி மூடும் நிலைக்கு வந்தது .இந்த தண்ணீர் பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.இதில் முக்கியமான ஒன்றாக பார்க்கபட்டது மழை நீர் சேகரிப்பு .
சென்னையில் நீர் நிலைகள் சென்ற இடத்தில கட்டிடங்கள் கட்டியதாலும் முறையற்ற மழை நீர் சேகரிப்பால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது .
இதனிடையே சென்னை முதல் தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மழை நீர் சேகரிப்பு முறையாக இருக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது .சென்னையில் நடத்திய ஆய்வில் 1,62,284 கட்டடங்கள் முறையான மழை நீர் சேகரிப்பு கொண்டுள்ளதாகவும் 69,490 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளதாகவும் இதில் 38,507 கட்டிடங்களுக்கு முறையான மழை நீர் கட்டமைப்பு அமைக்க 1 வாரம் கெடு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தற்பொழுது தமிழகமெங்கும் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் வெயிலில் இருந்து தப்பித்து சற்று நிம்மதி அடைத்துள்ளனர்.சென்னையில் முறையாக அமைக்கப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்பால் நிலத்தடியானது 4 அடி வரை உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது .