ரூ.5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்கள்.. இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கிய முதலமைச்சர்!
முதல் 5 பேருக்கு இணையவழி பட்டாக்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில் இணையவழி இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 12,563 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கும், 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச வீட்டுமனை பட்டா வழங்கபடுகிறது. முதல் 5 பேருக்கு இணையவழி பட்டாக்களை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வழங்கி, தொடங்கி வைத்தார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலான 69 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 2 அலுவலர்களுக்கு வாகனங்களை வழங்கினார்.
2021-22- ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அலுவலர்களுக்கு 108 வாகனங்களை 8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு 5 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.