ஒரு மாதத்தில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்..! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
ஒரு மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை தடையில்லாமல் அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியையும் ஏற்பாடுத்தித் தருகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6.30 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், மார்ச் 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மொத்தம் 69,99,341 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ச் 10ம் தேதி 2,58,671 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Press Release 01.04.2023 pic.twitter.com/G32U268HN1
— Chennai Metro Rail (@cmrlofficial) April 1, 2023