67 மாணவர்கள், 5 ஆசிரியர்கள்! கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்!

Default Image

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்.

பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துபாய்-க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று திருச்சி விமானத்தில் இருந்து பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் 67 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் ஐக்கிய அரபு நாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் (4 நாள் கல்வி சுற்றுலா) மேற்கொண்டார். அதனடிப்படையில், 34 மாணவர்கள் 33 மாணவிகள், 5 ஆசிரியர்கள், பள்ளிகல்வித்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் உடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் துபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு கல்விசுற்றுலாவிற்கு செல்கிறார்.

துபாயில் மாணவர்களுக்கு, புத்தகக்காட்சி, ஆய்வகம், சுற்றுலா மையங்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மாணவர்களை துபாய் அழைத்து செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பரில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் அமைச்சருடன் துபாய்-க்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

துபாய் பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புதிய கல்வி கொள்கை, நீட் உள்ளிட்டவை தமிழகத்துக்கு தேவையில்லை என ஒரே நிலைப்பாட்டில் உள்ளார். இதனால், எங்கள் மாநில பிள்ளைகளுக்கு என்ன தேவையோ அதை நாங்களே வடிவமைத்துக்கொள்வோம் என்றும் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் துபாய் அபுதாபி போன்ற நாடுகளுக்கு மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த கட்டமாக கட்டுரை போட்டியின் வாயிலாக சிறந்த 250 மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டம் உள்ளது தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்