தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2099 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79,651 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 14 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, சென்னையை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் சிவகங்கையை சேர்ந்த 13 வயது சிறுமி உட்பட இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 169 பெரும், திருவள்ளூரில் 133 பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மதுரையிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 45 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…